அதிமுகவிற்கு முதல் துரோகி தினகரன்தான் - கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கோவை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது;

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிகளில் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிமுகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர் தினகரன்தான்.

சமீபத்தில் ஸ்டாலின் சந்திரபாபுவை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் நாட்டின் நலன் கருதி பாலாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக கேட்டாரா? தமிழகத்திற்கு ஆந்திரா தரவேண்டிய தண்ணீர் குறித்து ஸ்டாலின் கேட்டாரா? நாங்கள் கொள்கை உணர்வுடன் தான் யாருடனும் கூட்டணி வைப்போம். ஆனால், திமுக சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து கொள்ளும். வயதான கமலுக்கு திரைஉலகில் ஓய்வு வழங்கப்பட்டு விட்டது. தற்போது அவர் அரசியலில் நடிக்க துவங்கியுள்ளார். அரசியலில் கமலின் நடிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனது படத்திற்கு பிரச்சினை வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய கமல், எப்படி மக்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார்?

விலையில்லா திட்டத்தை சமீபத்திய திரைப்படம் ஒன்றில் அவமதிக்கிறார்கள். இதனை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். திரைப்பட இயக்குநர் முருகதாஸ் உறவினர்கள் கூட விலையில்லா திட்டத்தால் பயன் பெற்றிருப்பார்கள். ஊடகங்களும் இதனை தெளிவுபடுத்த வேண்டும்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. காய்ச்சல் வந்ததும் அரசு மருத்துவமனையை அணுகினால், நிச்சயம் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார்


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி