குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றவாளிக்கு சிறையில் கிடைத்த தண்டனை!

பிரித்தானியாவில் குழந்தையை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த குற்றவாளி, சிறை முழுவதும் ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு சாரா பெய்ன் என்ற 6 வயது சிறுமி, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

பிரித்தானியாவையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ராய் வைட்டிங், 59 என்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறைக்குள் இருந்த குற்றவாளியின் மீது சககுற்றவாளிகள் இரண்டு பேர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனை பார்த்த சிறைக்காவலர்கள், விரைந்து வந்த தடுத்தி நிறுத்தி ராயினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறையிலே அதிக ரத்தம் வெளியேறி இருந்ததால், உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் ஆரம்பத்தில் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது தனியார் இதழுக்கு பேட்டியளித்த சிறை ஊழியர் மற்றும் NHS மருத்துவர், ராய் தற்போது உடல்நிலை தேறி நல்ல நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதற்கு முன்னதாக சிறையில் ராய் மீது, 2002, 2011 மற்றும் 2016ம் ஆண்டு கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


News: http://world.lankasri.com/
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி