நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!

நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துமாறும், நாடாளுமன்ற அமர்வுகளை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லிப்டன் சுற்றுவட்டப்பகுதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12 மணி முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது ‘ஜனநாயகத்தை வாழ விடு அதிகார அரசியல்வாதிகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்’ உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை, விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக அழுத்தம் பிரயோகித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


News: https://www.jvpnews.comShare on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி