தோட்ட தொழிலாளர்களுக்கு பண்டிகை முற்பணம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு பண்டிகை முற்பணமாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதற்கு, 22 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் கனிஸ்க்க வீரசிங்ஹ தெரிவித்துள்ளார். சில தோட்ட நிர்வாகங்களில் இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய நிறுவனங்கள் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னர், இந்தக் கொடுப்பனவுகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரச தோட்ட நிர்வாகங்கள் இந்தக் கொடுப்பனவை தற்போது வழங்கியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பாக தோட்டத் தொழில் சங்க கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.இராமநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,

நிறுவனங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார். இந்த வகையில் தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக அரச மற்றும் தோட்ட நிறுவனப் பிரதிநிதிகளுடன் எதிர்வரும் தினங்களில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் தோட்டத் தொழில் சங்க கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.இராமநாதன் மேலும் கூறினார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி