ஸ்ரீலங்காவிற்கு செல்வது குறித்து எச்சரித்த ட்ரம்ப்!!

ஸ்ரீலங்காவில் வன்முறைகள் வெடிக்கலாம் என்பதால் அந்த நாட்டிற்கு செல்வது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது.

நாடாளுமன்றத்திற்கு அருகில் நாளை ஐந்தாம் திகதி பாரிய போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால் இந்த முன் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஸ்ரீலங்காவின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை கடந்த மாதம் 26 ஆம் திகதி அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நியமித்திருந்தார்.எனினும் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை மைத்திரிபால சிறிசேன பிரதமராக்கியுள்ளமை, அரசியலமைப்புக்கு முரணானது என தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐக்கிய தேசிய கட்சி கூறிவருகின்றது.

ஆகவே நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்ச நிரூபிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர்.

எனினும் நாடாளுமன்றத்தை 16 ஆம் திகதி வரை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தும் கோரிக்கைகளும் போராட்டங்களும் வலுப்பெற்றுவருகின்றன.

இந்த நிலையில் ஸ்ரீலங்காவில் நீடிக்கும் அரசியல் ஸ்தீரமன்ற நிலைமை காரணமாக சிவில் வன்முறைகள், பணிப்பகிஷ்கரிப்புகள் மற்றும் போராட்டங்கள் அதிகரிக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பேரணிகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டாலும் அவை மோதலாக மாறி, வன்முறைகள் ஏற்படலாம் என அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரித்துள்ளது.

போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரித்துள்ள அமெரிக்கா, பாரிய அளவிலான ஒன்றுகூடல்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி