யாழில் உலகிற்கு முன்னுதாரணமாக விஜய் ரசிகர் மன்ற இளைஞர்கள் அசத்தல்!! – படங்கள்

அகில இலங்கை விஐய் நற்பணி மன்றத்தினால் . மரம் நடுவோம் பசுமையை காப்போம். என்ற தொணிப்பொலியில் . 650 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

இவ் நிகழ்வு நேற்று (04 – 11 – 2018 ஞாயிற்று கிழமை ) தெல்லிப்பளை வாலிபர் ஐக்கிய சங்க சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வை யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்

இவ் நிகழ்வு சர்க்கார் திரைப்படத்தை வரவேற்கும் முகமாக அகில இலங்கை விஜய் நற்பணி மன்றத்தினால் தெல்லிப்பளை வாலிபர் ஐக்கிய சங்க சனசமூக நிலையத்தின் ஊடக அப்பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்டது

இதனை மதிப்புக்குரிய யாழ் மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் வழங்கி சிறப்பித்தார் .

அதனை தொடர்ந்து அவரது சிறப்புரையில் பெரும்தலைவர் M.G.R இற்கு பின்பு மக்கள் மனதில் நிறைந்தவர் மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் தளபதி விஜய் எனவும் யாழ் தளபதி ரசிகர்கள் திரைப்படத்தை கொண்டாடுவது மட்டுமன்றி வருடாவருடம் இதுபோன்ற சமூக நல திட்டங்களை செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது.

இதே போல் இரண்டு வருடம் முன்பாக ஓர் திரைப்பட நிகழ்விலும் நான் கலந்துகொண்டேன் .

எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது , தற்போது உள்ள இளைஞர்கள் வழி தவறி தவறான பாதையில் செல்லும் போது இவர்கள் சமூக அக்கறையுடன் செயற்படுவது மிகவும் பெருமையாக உள்ளது .

மேலும் இவ் மன்றம் மிகவும் ஆரோக்கியமான ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மரம் நாட்டுதல் மற்றும் மரங்களை பிரதேச மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி