நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தும் ஐ.நா!

இலங்கை நாடாளுமன்றத்தில் முடிந்தவரை மிக விரைவில் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிய சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்.

இதையடுத்து வரும் 7ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார். இந்நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் குழப்பங்களை களைய ஐ.நா. உதவி செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி