தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் இத்தனை கோடி நஷ்டமா? எந்த ஹீரோவும் செய்யாததை செய்துள்ள அமீர் கான்

சினிமா துறையை பொறுத்தவரை படம் ஹிட் ஆனால் பெயர் ஹீரோவுக்கு, அதுவே பிளாப் ஆனால் வேறு யார் மீதாவது பழியை போட்டுவிடுவார்கள்.

சில முன்னணி நடிகர்கள் படம் பிளாப் ஆன பிறகு வாங்கிய சம்பளபணத்தை நஷ்டஈடாக கொடுப்பதும் நடக்கும். கொடுக்கமுடியாது என கூறினால் அதற்கு பஞ்சாயத்தும் நடக்கும்.

சமீபத்தில் வெளிவந்த பாலிவுட் படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் படுதோல்வி அடைந்தது. அமீர் கான் நடித்திருந்த இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, ஆனால் அதில் பாதியை கூட வசூலிக்கவில்லை.

இந்நிலையில் இந்த தோல்விக்கு தான் தான் காரணம் என கூறி வெளிப்படையாக கூறியுள்ளார் அமீர் கான். நேற்று ஒரு விழாவில் பேசிய அவர் எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்றவர்கள் ஏமாற்றமடைந்திருந்தால் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.

எந்த ஹீரோவும் இப்படி தோல்விக்கு பொறுப்பு எடுத்துக்கொள்வது நாம் பார்ப்பது அரிதான ஒன்று தான்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி