யாழ் நோக்கி சென்ற புகையிரதத்திலிருந்து இளைஞர் ஒருவர் விழுந்து பலி!

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்திலிருந்து இளைஞர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை 5.30 மணியளவில் தாண்டிக்குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியைச்சேந்த 28 வயதுடைய விஜயசீலன் கிறிஸ்ரிதீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கொழும்பில் மேசன் வேலை செய்பவர் எனவும் விடுமுறைக்காக வீடு செல்லும் வழியில் இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் தவறியே விழுந்ததாகவும் அவருடன் பயணித்தர்கள் தெரித்துள்ளனர்.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி