எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் தகவல்!

எதிர்காலத்தில் எரிபொருள் விலையை குறைப்பதற்குரிய முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கனிய வளத்துறை இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சுப்பதவியை இன்று(வியாழக்கிழமை) பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு 100 சதவீதம் மசகெண்ணெய்யை மாத்திரம் இறக்குமதி செய்து, அதனை சுத்திகரிப்பதன் மூலம், எரிபொருள்விலையை கணிசமாக குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுதொடர்பில் தாம் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரச மொழிகள் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள வாசுதேவநாணயக்கார, இன்றையதினம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி