கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் விபத்து!!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையிலிருந்து கொழும்புநோக்கிப் பயணித்த ரயிலில் காரொன்று மோதுண்டதனால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கந்தர்மடம் இந்துமகளிர் வீதியில் பாதுகாப்பற்ற ரயில்கடவையில் இன்று நண்பகல் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இதன்போது படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற ரயில்கடவையை கடக்கமுற்பட்டபோதே எதிரேவந்த ரயில், காரைமோதி கந்தர்மடம் அரசடிவீதிவரை இழுத்துச்சென்றுள்ளது.

இந்தநிலையில் குறித்தவிபத்தில் காயமடைந்த வர்த்தகர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


News: https://www.jvpnews.comShare on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி