நாடாளுமன்றைக் கலைப்பதற்கு முன்னர் மைத்திரி மேற்கொண்ட அதிரடி!!

சிறிலங்கா நாடாளுமன்றத்தைஇன்று நள்ளிரவுடன் கலைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் சிறிலங்காஅரச தலைவர் மைத்ரிபால சிறிசேன இந்த அதிரடி உத்தரவை விடுத்திருக்கின்றார்.

இதற்கமைய நாடாளுமன்றத்தைகலைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்றுநள்ளிரவுக்குள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த உத்தரவைபிறப்பிப்பதற்கு முன்னதாக இன்றைய தினம் அதிரடியாக அரச அச்சகத் திணைக்களத்தையும், சட்டம் – ஒழுங்குஅமைச்சையும் தனது கட்டுப்பாட்டிற்குள் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனகொண்டுவந்திருந்தார்.

இந்த நிலையிலேயே சிறிலங்காநேரப்படி இன்று இரவு எட்டு மணியளவில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அரச தலைவர்மைத்ரிபால சிறிசேன விடுத்த உத்தரவு குறித்த தகவல் கசிந்தது.

நாடாளுமன்றத்தை கலைக்கும்சிறிலங்கா அரச தலைவரின் உத்தரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்திணைக்களத்தினால் அச்சிடப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

இதனால் அரச அச்சகத்திணைக்களத்தில் இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படை பொலிசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பும்பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் புதியபிரதமராக முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதிநியமித்த அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன, ரணிலை பிரதமர் பதவியில்இருந்து அதிரடியாக நீக்கியிருந்தார்.

எனினும் இந்த நியமனத்தைரணில் விக்கிரமசிங்கவும், அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஏற்காதநிலையில் நாட்டின் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது.

நவம்பர் 16 ஆம் திகதிக்குநாடாளுமன்றத்தை ஒத்திவைத்த அரச தலைவர் அடுத்தடுத்து மஹிந்தவுடன் இணைந்து உருவாக்கியஅரசாங்கத்திற்கான அமைச்சர்களையும் நியமித்தார்.

எனினும் இந்த நடவடிக்கைகளின்அரசியல் சாசன நடைமுறை தொடர்பில் கேள்வி எழுப்பிவந்த மேற்குலக நாடுகள்நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி பிரதமருக்கான வாக்கெடுப்பை நடத்துமாறுதொடர்ச்சியாக வலியுறுத்திவந்தன.

சர்வதேச சமூகத்தின் இந்தஅழுத்தங்களை அடுத்து 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாக வர்த்தமானிஅறிவித்தல் மூலம் ஜனாதிபதி மைத்ரிஅறிவித்தார்.

எனினும் நாடாளுமன்றில்பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்குத் தேவையான 113 உறுப்பினர்களின் ஆதரவைதிரட்டிக்கொள்வதில் மைத்ரி – மஹிந்த கூட்டணியால் முடியாது போன நிலையில்நாடாளுமன்றத்தை கலைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தத் தகவல் வெளியில்கசிந்ததை அடுத்து நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் தமக்கில்லை என்றும், தமக்கு நாடாளுமன்றில்பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் மைத்ரி – மஹிந்த அணியினர் தொடர்ச்சியாகஏஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தி கூறிவந்தனர்.

அதேவேளை நாட்டில்ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு நாட்டு மக்களே தீர்வு வழங்க வேண்டும்என்றும் அதற்கு பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதே சிறந்தது என்றும் புதிய பிரதமராகநியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கூறினர்.

இந்த நிலையிலேயே இன்றுநள்ளிரவுடன் நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவை சிறிலங்கா அரச தலைவர்விடுத்திருக்கின்றார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்என்ற செய்தி இன்று நண்பகலுக்குப் பின்னர் கொழும்பில் வேகமாக பரவி வந்ததை அடுத்துஅது குறித்த தகவல்களை ஐக்கிய தேசியக் கட்சியின் ய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டிசில்வா தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார். .

நாடாளுமன்றில் பெரும்பான்மையைநிரூபிப்பதற்குத் தேவையான 113 உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்ள முடியாததைஅடுத்தே மைத்ரி – மஹிந்த கூட்டணி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அதனாலேயே அவசர அவசரமாகஅமைச்சர்களை நியமித்து வருவதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.

இந்த நடவடிக்கைகள் ஊடாகபொதுத் தேர்தலொன்று சென்று, அரச அதிகாரங்களை தமது தேர்தலுக்கு முழுமையாகப்பயன்படுத்திக்கொள்வதற்கு மைதரி – மஹிந்த கூட்டணி திட்டமிட்டிருப்பதாகவும்ஹர்ஷ டி சில்வா எச்சரித்திருந்தார்.

இந்த கருத்துக்களைஉறுதிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் முற்பகல் விமல் வீரவன்ச அமைச்சராகபதவியேற்றிருந்த நிலையில் இன்று இரவு மேலும் ஏழு அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்செய்துகொண்டனர்.

இதற்கமைய குருநாகல் மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக, நுகர்வோர் மற்றும் கூட்டுறவுஅமைச்சராக மைத்ரிபால முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நுவரெலியா மாவடட நாடாளுமன்றஉறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சராகநியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினரான பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில புத்த சாசன, சமய அலுவல்கள் அமைச்சராகவும், எஸ்.எம்.சந்திரசேனபெருந்தோட்டத்துறை அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இதேவேளைஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராகவும், காமினி லொக்குகே தொழில்மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினரான மஹிந்த யாப்பா அபேவர்தன கைத்தொழில் மற்றம் வர்த்தக அமைச்சராகபதவியேற்றுள்ளார்.

இந்த அமைச்சர்கள்பதவியேற்பதற்கு முன்னதாக இன்று முற்பகல் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரானநாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, வீடமைப்பு மற்றும் கட்டடநிர்மாணத்துறை அமைச்சராக சிறிலங்கா அரச தலைவர் முன்னிலையில்பதவியேற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி