மைத்திரி – மஹிந்தவுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்துக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ச அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஓசல ஹேரத் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சபாநாயகர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன எடுத்த தீர்மானம் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தமது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி