மகிந்த பக்கம் சாய்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலாசார விவகார, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி நாவின்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்துவரும் சில தினங்களில் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.


News: https://www.jvpnews.com


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி