சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை!!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சர்வதேச நாடுகள் கவனஞ்செலுத்தி வருகின்றன.

நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறுமென அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், அதற்கு சில தினங்களுக்கு முன்பாக இவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியாவின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நல்ல நண்பன் என்ற ரீதியில், இலங்கையின் சகல கட்சிகளும் அரசியலமைப்பை மதித்து செயற்பட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஜனநாயகத்தை மதித்து சகல நிறுவனங்களும் செயற்பட வேண்டும் என்றும் மார்க் ஃபீல்ட் வலியுறுத்தியுள்ளார்.


News: https://www.jvpnews.com


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி