வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் குருபூஜை

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஐயப்பன் குருபூஜை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று பஜனை கோசப்பிரியர் மணிமண்டப குருசாமி பாபு தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, குருசாமிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.

மேலும், இவ் பூஜையில் அகில இலங்கை பாரத ஐயப்ப சேவா சங்க ஒன்றியத்தலைவர் குருநாதர் (ரவிகுருசாமி), வவுனியா மாவட்ட குருசாமிகள் மற்றும் ஏனைய மாவட்ட குருசாமிகளும் கௌரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி