புற்று நோயிலிருந்து விடுபட போராடும் நடிகை ரம்யா! தற்போதைய அவரது நிலைமை எப்படி உள்ளது பாருங்க!

சிம்புவின் குத்து படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா. சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த போதே அரசியலிலும் காங்கிரஸில் சேர்ந்து பார்லிமெண்ட் உறுப்பினரானார்.

இவரது இந்த அரசியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியர் சில நாட்களுக்கு முன்பு மறைந்த கன்னட நடிகர் அம்ரீஷ். ஆனால் இவரது மறைவுக்கு ரம்யா வராததால் ரம்யாவுக்கு பல இடங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அம்ரீஷ் ரசிகர்கள் ஒட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ரம்யா வராததற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அதில், கடந்த அக்டோபரில் இருந்து நான் ஆஸ்டியோபிளாஸ்டோமா என்ற விநோத நோயினால் அவதிப்பட்டு வருகிறேன். பாத எலும்புகளில் கடுமையான வலி உள்ளது. அதை அலட்சியம் படுத்தி நடந்து சென்றால் புற்று நோயாகவும் மாற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதனால் தான் நான் அம்ரீஷ் மறைவுக்கு வர முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என கூறியுள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி