இங்கிலாந்தின் மிகவும் அபாயகரமான பத்து கடற்கரைகள்!!

தண்ணீர் தரக் கட்டுப்பாட்டு சோதனைகளுக்குப் பின்னர் இங்கிலாந்தின் பத்து கடற்கரைகள் மிகவும் அபாயகரமானவை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு நீந்த வேண்டாம் என சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு சில மாதங்களுக்குமுன் Ilfracombe Wildersmouth கடற்கரையில் தொடர்ந்து நீந்தச் சென்ற 12 வயது சிறுமி ஒருத்திக்கு கடும் நோய்த்தொற்று ஏற்பட்டது.

உலக நாடுகள் பலவற்றில் பிரச்சினைகளுக்கு காரணமாக விளங்கும் ஈ.கோலை என்னும் நோய்க்கிருமி உட்பட பல நோய்க்கிருமிகள் அந்த கடற்கரைகளிலுள்ள தண்ணீரில் காணப்படுகின்றன.


ஆண்டுதோறும் மே மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் சுற்றுச்சூழல் ஏஜன்ஸி இங்கிலாந்து முழுவதிலுமுள்ள 420 குளிக்கும் இடங்களில் தண்ணீரின் தரத்தை சோதித்து அதில் எவ்வளவு கிருமிகள் வாழுகின்றன என்பதை அறிகின்றது.

2018இல் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில், 10 கடற்கரைகளில் உள்ள தண்ணீர், நீந்துவதற்கேற்ற தரம் இல்லாததாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


நீந்துவதற்கு மிகவும் அபாயகரமான கடற்கரைகளாக கீழ்க்கண்ட கடற்கரைகள் கண்டறியப்பட்டுள்ளன.

Tynemouth Cullercoats (Tyne and Wear);

Allonby South (Cumbria);

Scarborough South Bay (Yorkshire);

Burnham Jetty North (Somerset);

Weston Main (Somerset);

Combe Martin (Devon);

Ilfracombe Wildersmouth (Devon);

Instow (Devon)

Leigh Bell Wharf (Essex)

மற்றும் Clacton - Groyne 41 (Essex).

இந்நிலையில் பிரெக்சிட் வேறு வரவிருப்பதால், ஏற்றுமதிக்காக பிரித்தானியா சுற்றுச்சூழல் தரக்கட்டுப்பாடுகளை தளர்த்தினால், இன்னும் கடற்கரைகளின் தரம் குறையும் என்னும் அச்சமும் நிலவுவதை மறுக்க முடியாது.


News: https://news.lankasri.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி