ஜனநாயகத்தை மீட்டெடுக்க நாட்டு மக்கள் ஒன்றிணையுமாறு கோரிக்கை!!

ஜனநாயகத்தை மீட்டெடுக்க மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவுகளை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பில் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில் “பெரும்பான்மையற்ற கையறு நிலையில் இருந்த ஜனாதிபதி இயலாக் கட்டத்தில் சட்டவிரோதமாக நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜனநாயகம், பண்பாடு மற்றும் சட்ட விதிகளை மதிக்கும் அனைவருமே இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.” என கூறியுள்ளார்.


News: https://www.jvpnews.com




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி