கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்! முக்கிய அமைச்சர் பதவி விலகல்!!

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்! சுதந்திரக் கட்சி எம்.பீ மனுஷ அந்தர்பல்டி: 

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் அதிரடி நடவடிக்கையால் பெரும்நெருக்கடிக்குள் மஹிந்த – மைத்திரி கூட்டணி தள்ளப்பட்டிருக்கின்றது.

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின்அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்றைய தினம் திடீரென தனது பிரதி அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்வதாக அறிவித்துள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் பதவியில்இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தின்ஜனநாயகத் தன்மை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டு வருவதையும், சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது நிராகரிப்பதையும் சுட்டிக்காட்டி அரசதலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பியிருக்கின்றார்.

அதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும்பிரதமராக ஏற்றுக்கொள்ளுமாறும் மனுஷ நாணயக்கார சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபாலசிறிசேன மற்றும் புதிய பிரதமர் மஹிநடத ராஜபக்ச ஆகியாரிடமும், அவர்களின் கட்சியினரிடமும் கோரிக்கையும் விடுத்திருக்கின்றார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்தராஜபக்சவிற்கு தேவையான 113 என்ற பெரும்பான்மைப் பலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகநேற்றைய தினம் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற பெதுக் கூட்டத்தில் ஆற்றியஉரையில் சிறிலங்கா அரச தலைவரும், மஹிந்த அணியினரும் சூளுரைத்திருந்தனர்.

இந்த நிலையில் மஹிந்த – மைத்திரி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே அவர்களிடமிருந்து விலகிச் சென்றுள்ளமைபெரும் நெருக்கடியை தோற்றுவித்திருக்கின்றது.

இதனால் மஹிந்த – மைத்ரி அணி பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும் கொழும்புஅரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் பிரதமர் யார் என்பதைதீர்மானிக்கும் சக்திகளான தொடர்ந்தும் இருந்துவரும் ஜே.வி.பி மற்றும் தமிழ்தேசியக் கூடடமைப்பினர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக ஏற்கனவேஅறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பித்தக்கது..


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி