இலங்கை குறித்து பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸின் டுவிட்டர் பதிவு!!

இலங்கை பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கைக்கான பிரிட்டனின் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் கவலையுடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் முக்கியமான பணிகளையாற்றுவதற்கே பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கை மக்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை மீண்டும் பார்த்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிற்கும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரளுமன்றத்திற்கும் உரிய விதத்தில் செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் அதன் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அதன் உறுப்பினர்களே தடுத்தால் எந்த பாராளுமன்றமும் இயங்கமுடியாது எனவும் பிரிட்டிஸ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி