சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

அரசியலமைப்பின் 86 வது பிரிவின் அடிப்படையில் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துமாறு நிபுணர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

பேராசிரியர் வணக்கத்துக்குரிய தம்மரதன தேரர் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் காசுக்கு விலை போவதாகவும் மற்றும் சபாநாயகர் சட்டத்துக்கு புறம்பாக செயற்படுவதாகவும் பேசப்படுகிறது.

இவ்வாறான நிலையில் , புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்களின் வாக்குகளில் தேர்ந்தெடுப்பதே பொருத்தமானது என அவர்கள் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி