கிளிநொச்சியில் மரக்கன்றுகளை நடுகை செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி முரசுமோட்டை வட்டாரத்தில் தேசிய மர நடுகை மாதத்தினை முன்னிட்டும், புனித நாட்களை அனுஸ்டிக்கும் வகையிலும் மரக்கன்றுகள் நடுகை செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று கரைச்சிப்பிரதேச சபையின் முரசுமோட்டை வட்டார உறுப்பினர் ம. நந்தகுமாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, முரசு மோட்டை கோரக்கன் கட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 150இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கார்த்திகை மர நடுகை மாதத்தினை முன்னிட்டும் பல பகுதிகளிவ் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி