கேப்பாபுலவு அ.த.க பாடசாலையில் மரங்கள் நடும் திட்டம்

இன்றைய தினம் கனடா டொரோன்டோ டெவலப்மென்ட் பவுண்டேஷன் தத்தெடுத்துள்ள முல்லைத்தீவு - கேப்பாபுலவு அ.த.க.பாடசாலையில் 1001 மரங்கள் நடும் திட்டம் சிறப்பாக பாடசாலை வளாகத்தினுள் நடைபெற்றுள்ளது.

இந்த பாடசாலை வளாகத்தினுள் இன்றைய தினம் பயன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை டொரோன்டோ புளூஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷன் நடத்துவது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் மரம் நடும் நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கரத்துறைபற்றுதோட்டக்கல்வி அதிகாரி ஸ்ரீபுஷ்பகாந் மனித உரிமை செயற்பாட்டாளர் முபாத் சமூக ஆர்வலர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி உறுப்பினர்கள், எழுத்தாளர்கள் கிராம பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி