லண்டனில் பற்றி எரிந்த பேருந்து நிலையம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

லண்டனில் இன்று காலை உள்ளூர் நேரப்படி சுமார் 4 மணியளவில் 10 முறை வெடிச்சத்தம் கேட்டதையடுத்து பதறியெழுந்த பொதுமக்கள் பேருந்து நிலையம் பற்றி எரிவதையறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

தெற்கு லண்டனில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் பத்து வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 11 பேருந்துகள் தீப்பற்றிய நிலையில், பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தொடர்ந்து 40 முறை தொலைபேசி அழைப்புகள் வரை விடுத்தனர்.


தற்போது தீ கட்டுக்குள் வந்து விட்டது என்றாலும், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே இருந்து வாகனங்களை முற்றிலும் நனைத்து வருகின்றனர்.

வாகனங்களில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில், சுமார் 30 வாகனங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தீப்பிடித்ததற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


News: https://news.lankasri.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி