ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக ரணிலும் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவும்!

எந்த முறையில் அடுத்த பிரதமர் தேர்தல் மற்றும் பொது தேர்தலில் முகம் கொடுப்பது தொடர்பில ஐக்கிய தேசிய கட்சி கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானமிக்க பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க வேண்டும் என பெரும்பான்மையோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கருத்து தொடர்பில் நியாயமான முடிவு ஒன்று பெரும்பான்மை உறுப்பினர்களினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை தீர்மானமிக்க கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அங்கு பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


News: https://www.jvpnews.com


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி