உறவு கொள்ள மறுத்ததால் போட்டுத்தள்ளிய சிறுவன்: முரணான பதிலால் மாட்டிக்கொண்ட சிறுவன்

ஜேர்மனியில் தன்னை விட மூத்த ஒருவருடன் நட்பு வைத்திருந்த சிறுவன், அவருடன் உறவு கொள்ள விரும்பிய போது அவர் மறுத்தமையினால் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளான்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;

ஜேர்மனியின் Wendenஇலுள்ள Gesamtschule பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் ஒருவன் வீடு திரும்பாததால் அவனது பெற்றோர் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

அவனது நண்பனான 14 வயது மாணவன் ஒருவனை சாட்சியமாக கருதி பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் குறித்த சிறுவன் முன்னுக்குப்பின் முரணாக பதிலைக் கூறியுள்ளான்.

இதனைத்தொடர்ந்து விசாரிக்கும் போது,

தாங்கள் இருவரும் பள்ளிக்கு கட் அடித்துவிட்டு சென்றதாகவும், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆளுக்கொரு திசையில் சென்று விட்டதாகவும் கூறினான்.

இந்நிலையில் பள்ளியிலிருந்து சற்று தொலைவில் காணாமல் போன மாணவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவன் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து இறந்த மாணவனின் நண்பனை விசாரித்தபோது, உண்மைத் தகவல்கள் அம்பலமானது. அப்போது தன் நண்பனுடன் பாலுறவு கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், அதற்கு அவன் மறுத்துவிட்டதால் அவனைக் கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டான்.

அவனைக் கைது செய்த பொலிசார் காவலில் வைத்துள்ளனர். கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவனுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி