கூட்டமைப்புடன் அவசர சந்திப்பை மேற்கொண்ட ஜனாதிபதி!!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஜனாதிபதி நாளை கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை நிரூபிக்கமுடியாமல் தடுமாறிவரும் மஹிந்தவுடன் இணைந்து செயற்பட முடியாது என்ற தீர்மானத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்காரணமாக நாளைய சந்திப்பு அரச தரப்பிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, மூன்றாவது முறையாகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி