யாழில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிய இளைஞன்!

யாழ் அல்லைப்பிட்டியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மீட்ட இந்த பரபரப்பு சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

அல்லைப்பிட்டி வாடிவீட்டுக்கு அண்மையில் வீதியோரமாக கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ் வீதியால் வந்த முச்சக்கரவண்டி சாரதியொருவர் அவதானித்து பின் வேறு சிலரும் கூடி, அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு அறிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நோயாளர் காவு வண்டி, இளைஞனை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இளைஞன் கழுத்தறுக்கப்பட்டிருந்த இடத்தில் அவரது துவிச்சக்கர வண்டி, செருப்பு என்பன வேறுவேறு திசைகளில் காணப்பட்டன.சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது கொலை முயற்சியா அல்லது தற்கொலை முயற்சியா என்பதை இன்னும் உறுதிசெய்யவில்லையென பொலீஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி