தற்போதைய அரசியல் நெருக்கடியால் வெளிநாடு தப்பிச் சென்ற முக்கியஸ்தர்!

தென்னிலங்கையில் இப்போது சூடு பிடித்திருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும் ஓரளவு திடமாக நிற்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

அவரது தரப்பில் அரசியல் வியூகங்களை வகுக்கும் - அல்லது கையாளும் - சாணக்கியராக நோக்கப்படுபவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட எம்.பியும், ஜனாதிபதி சட்டத்தரனியுமான எம்.ஏ.சுமந்திரன்தான்.

நேற்று அவர் திடீரென கொழும்பில் மிஸ்ஸிங். அவரது தொலைபேசி அவர் வெளிநாட்டில் என்றது. எந்த நாடு என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.

அவரிடம் இருந்து தான் பதில் இல்லை என்றால், அவருக்கு நெருங்கியவர்களும் பத்திரிகையாளர்களின் தொலைபேசிக்கு லைனில் வர மறுத்து அதிசயமான மௌனம் காத்தனர்.

நேற்று முந்தினம் தமது சக எம்.பிக்கள் சிலருடன் சரளமாக உரையாடிய சுமந்திரன், தற்போதைய அரசியல் நெருக்கடியினால் தமக்கு பாதுகாப்புச் சிக்கல் இருப்பதாகவும் ஓரிரு நாட்கள் வெளியே வெளிநாட்டுக்கு - போய் இருந்துவிட்டு, நாடாளுமன்ற அமர்வு சமயம் மட்டும் சபைக்கு வந்து போனால் என்ன என்று யோசிக்கிறேன் என்று 'கயிறு' விட்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

நேற்று முந்தினம் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான உரையாடலுக்கு மத்தியில் நேற்று புதனன்று ஒரு வேலையாக இந்தியா போகவேன்டியிருக்கிறது என அவர் மேம்போக்காகக் குறிப்பிட்டார் எனவும் அறிய முடிந்தது.

ஆனால் தாங்கள் அறிந்தவரை சுமந்திரன் இந்தியா செல்லவில்லை எனக் கொழும்பில் உள்ள இந்தியத் தரப்புக்கள் உறுதிபடத் தெரிவித்தன.

அப்படியானால் சுமந்திரன் எங்கு சென்றார்? இந்த அரசியல் நெருக்கடி சமயம் இந்த திடீர் வெளிநாட்டு அதிரடி விசிட் ஏன்?

நிச்சயமாக பாதுகாப்பு கருதி அவர் வெளிநாடு போகவில்லை. ஏனென்றால் 24 மணிநேரத்திற்குள் தமது வெளிநாட்டு விசிட்டை முடித்துக்கொண்டு நேற்றிரவு அவர் கொழும்பு திரும்பவிருந்தார் என எதிர்பாக்கப்பட்டது. 24 மணித்தியாலயத்திற்கு குறைந்த ஒரு நேரத்திற்கு பாதுகாப்பிற்காக அவர் வெளிநாடு செல்லவேண்டிய தேவை ஏதும் கிடையாது என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கான அப்போதைய கூட்டு எதிரணியின் திட்டமிடல், வியூகம் வகுத்தல், மந்திராலோசனைச் சந்திப்பு எல்லாம் சிங்கப்பூரில் தான் நடந்தன.

அது போன்ற ஒரு நாட்டுக்குத் தான் சில தரப்புக்களுடனான மந்திராலோசனைக்கு சுமந்திரன் இப்போது போயிருக்கலாம், அதனால் தான் மூன்றாம் நபருக்கு தெரியாமல் சத்தம் சந்தடியின்றி அவர் பயணமானார் என்று சில வட்டாரங்கள் ஊகம் தெரிவித்தன.

எது எப்படியென்றாலும் இன்னும் ஓரிரு தினங்களிற்குள் விடயம் அம்பலமாகும் என எதிர்பாக்கலாம்.

நாட்டில் இருக்க வேண்டிய சுமந்திரன் திடுதிப்பென வெளிநாடு போகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தமது ஒரிஜினல் திட்டப்படி நேற்று லண்டன் போயிருக்க வேண்டியவர்.

ஆனால் தென்னிலங்கையில் வெடித்த அரசியல் களேபரம் காரணமாக அவரது லண்டன் விசிட் தடைப்பட்டு போயுள்ளது. தமது லண்டன் பயணம் தள்ளிப்போன கடுப்பில் சப்பந்தன் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சுமந்திரனுக்கோ எதிர்பாராத வெளிநாட்டுப் பயணம், சம்பந்தனுக்கோ திட்டமிட்ட வெளிநாட்டுப்பயணம் ரத்து. இது தான் அரசியல்வாதிகளின் நிலமை பாருங்கோ.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி