பெண்ணை துஸ்பிரயோகம் செய்தது வீடியோ எடுத்த திருடன் !

தூங்கிக் கொண்டிருந்த 65 வயதுடைய வயோதிபப் பெண்ணை கூரிய கத்தியைக் காட்டி துஸ்பிரயோகம் செய்ததுடன் அதனை வீடியோ எடுத்த சம்பவமொன்று நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு குரண பிரதேசத்தில் வசிக்கும் குறித்த செல்வந்தரான அப்பெண்ணின் வீட்டுக்குள் கூரிய கத்தியுடன் சென்று நபர்கள் அப்பெண்ணை அச்சசுறுத்தியுள்ளனர்.

சந்தேக நபருடன் வந்த மற்றுமொருவர் வயோதிபப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அதனை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

அதன்பின் சந்தேக நபர்கள் அப்பெண்ணின் தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதான சந்தேக நபர் மற்றும் அவரின் நண்பரும் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பிரதான சந்தேகநபர் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி