உன்னை பலாத்காரம் செய்து கொலை செய்ய வேண்டும்.. சின்மயியை அசிங்கமாக திட்டி மிரட்டிய நபர்!

கடந்த சில மாதங்களுக்கு முன் சின்மயி மீடு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சின்மயி ஆதாரவாகவும் பலர் குரல் கொடுத்தனர். சிலர் விஷ கிருமிகள் அவரை கீழ் தரமாகவும் திட்டி பொழிந்தனர். தற்போது பாலியல் புகார் தெரிவித்த பாடகி சின்மயிக்கு பலாத்கார மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் தெரிவித்தார். 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அண்மையில் தெரிவித்தார். 13 ஆண்டுகள் கழித்து சொல்லியுமே அனைவரும் தன்னை தான் அசிங்கப்படுத்துகிறார்கள், அப்பொழுதே சொல்லியிருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.அசிங்கமாக திட்டிவரும் நபர்கள்
இதற்கிடையே ட்விட்டரில் அவரை அசிங்கம், அசிங்கமாக திட்டி பல ட்வீட்டுகள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு சில ட்வீட்டுகளை எடுத்து அவர் வெளியிட்டுள்ளார். அதில் ஒருவர் சின்மயியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மற்றவர்கள் மிகவும் கீழ்த்தரமாக ட்வீட்டியுள்ளார்.

ஒரு பெண்ணை சமூக வலைதளத்தில் இப்படி எல்லாம் பேசுவது சரியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அந்த ட்வீட்டுகள் மிகவும் மோசமாக உள்ளதால் அதை இங்கே வெளியிடவில்லை. சின்மயி அந்த ட்வீட்களை பார்த்து மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி