இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை!

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் அனைத்து ஒப்பந்தங்களையும் மீளாய்வு செய்ய குழுக்கள் நியமிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அத்துடன் அவர்கள் சாதகமற்ற விடயங்களை சாதகமாகும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வருடம் ஓகஸ்ட் மதம் இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சுயாதீன நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


News: https://www.jvpnews.comShare on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி