ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றத் தயார் - ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றத் தயார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்து நாளிதழிற்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதியுடன் இன்னமும் இணைந்து பணியாற்ற தயாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, என தெரிவித்துள்ளதுடன் இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேட்கவேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியலமைப்பில் தனிப்பட்ட பாரபட்சங்களிற்கு இடமில்லை எனவும் பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் பாரளுமன்றமே அதிஉயர் அதிகாரங்களை கொண்டது என்பதனை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பதற்கான போதிய எண்ணிக்கை உள்ளது என நம்பிக்கை வெளியிட்டுள்ள ரணில் அவர்களிற்கு போதிய பெரும்பான்மையில்லாததன் காரணமாகவே பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தயங்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தினை கூட்டுவது தாமதமாவது தனக்கு கவலையளிக்கின்றது எனவும் இதன் காரணமாக நாடு மேலும் ஸ்திரமின்மையை நோக்கி தள்ளப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக தாங்கள் நீதிமன்றம் சென்றாலும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சென்று இதற்கு தீர்வை காணுங்கள் என தெரிவி;ப்பார்கள் என குறிப்பிட்டுள்ள ரணில் இந்திய நீதிமன்றங்களுக்கும் இலங்கை நீதிமன்றங்களிற்கும் இந்த விடயத்தில் வித்தியாசம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையயை நிருபித்த பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் புதிய அமைச்சரவையை அறிவிக்கவேண்டியிருக்கும் எனவும் முன்னைய அமைச்சரவையில் இருந்த பலர் சிறிசேனவினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் இணைந்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி