ஒட்டிப் பிறந்த குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்கள்!!

பூட்டானைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்கள் அவர்கள் பூரண குணம் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

15 மாதக் குழந்தைகளான Nima மற்றும் Dawa Pelden, மார்பிலிருந்து வயிறு வரை ஒட்டியே பிறந்ததோடு இருவருக்கும் சேர்த்து ஒரு கல்லீரல்தான் இருந்தது.

அவுஸ்திரேலிய மருத்துவர்கள் ஆறு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக Nimaவையும் Dawaவையும் பிரித்தெடுத்தனர்.

அறுவை சிகிச்சையை தலைமையேற்று நடத்திய Dr Joe Crameri கூறும்போது, எந்த ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் பெற்றோரிடம் சென்று, உங்கள் குழந்தையை எங்களால் நல்ல முறையில் பார்த்துக் கொள்ள முடிந்தது என்று கூறுவதைவிட சிறந்த விடயம் எதுவும் இல்லை என்று கூறினார்.

அறுவை சிகிச்சைக்கு முன் Nimaவாலும் Dawaவாலும் ஒரே நேரத்தில் சேர்ந்து நிற்க முடியுமேயொழிய உட்கார முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

18 மருத்துவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

எந்த ஒரு அறுவை சிகிச்சையையும் போலவே இதிலும் 24 முதல் 48 மணி நேரத்திற்கு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் நல்ல முடிவு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.


News: https://news.lankasri.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி