சட்டவிரோத வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாது! வெளிநடப்பு செய்த ஆளும் கட்சியினர்!

சட்டவிரோத ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாது வெளிநடப்பு செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றத்தில் றே்று 121 வாக்குகளால் நாங்கள் வெற்றி பெற்றோம். வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாது அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தும் போது அதனை எதிர்கொள்ள முடியாது தடைகளை ஏற்படுத்தினர்.


இதற்கு நாட்டில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக இன்று கடந்த முறை போல் தடைகளை ஏற்படுத்தாது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தும் போது தப்பியோடினர்.

பலந்தமாக அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். பிரதமர், அமைச்சரவையை நியமித்து பலவந்தமாக அரசாங்கத்தை முன்னெடுக்கும் தேவை என்ன?.

அவர்களுக்கு கிடைக்கும் சிறப்புரிமை ஒரு காரணம். பிரதமர் தற்போது உலங்குவானூர்தியில் நாடாளுமன்றத்திற்கு வருவதை நாம் கண்டோம். உங்கள் அனைவருக்கும் தெரியும் வழக்குகளின் தீர்ப்புகளும் வழங்கப்பட உள்ளன.

விசேட மேல் நீதிமன்றம் இந்த மாதம் வழக்குகளை விசாரிக்கும். வழக்குகளை நிறுத்த அழுத்தம் கொடுப்பதற்காவே பலவந்தமாக அட்டைகளை போல் அரசாங்கத்தை பிடித்துக்கொண்டுள்ளனர்.

நவம்பர் 5ஆம் திகதி நாங்கள் வரவு செலவுத்திட்டம் ஒன்றை தாக்கல் செய்யவிருந்தோம். அந்த வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு அதிகளவான நிவாரணங்கள் வழங்கப்படவிருந்தன.

அந்த சந்தர்ப்பத்தை எமக்கு இல்லாமல் செய்யவே பலவந்தமாக அரசாங்கத்தை பிடித்துக் கொண்டுள்ளனர். அரசாங்கம் என்ற வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் முன்னெடுத்து வந்த பொருளாதாரத்தின் பிரதிபலன்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிடைக்க உள்ளன.

அந்த பிரதிபலன்களை நாங்கள் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தால், மகிந்த ராஜபக்ச தரப்பினரால் எதிர்காலத்தில் நடக்கும் தேர்தல்களை எதிர்நோக்க முடியாது.

இதன் காரணமாக பிரதமரும், அமைச்சர்களுக்கும் இந்த அரசாங்கத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த தவறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே திருத்த முடியும். ஜனாதிபதி இன்றைய நாளில் தீர்மானங்களை எடுப்பார்கள் என்ற கருத்துக்களும் நிலவுகின்றன.

ஜனாதிபதி கூறியது போல் இன்று நாங்கள் எமக்கு தெளிவான பெரும்பான்மை இருக்கின்றது என்பதை நிரூபித்துள்ளோம்.

ஜனாதிபதி கட்சித் தலைவர்களை அழைத்து பெயரில் அல்லது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பை நடத்துங்கள் என்று கூறியிருந்தார்.

ஜனாதிபதி கூறிய விதத்தில் நாங்கள் வாக்கெடுப்பை நடத்தியுள்ளோம். ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது மிகவும் தெளிவானது.

இதனால், கடந்த 26ஆம் திகதி செய்த தவறை திருத்த ஜனாதிபதிக்கு இன்று சந்தர்ப்பம் உள்ளது. நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ஜனாதிபதியின் உதவியை கோருகிறோம்.

பெரும்பான்மை பலம் இருக்கும் அணிக்கு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதுதான் தவறை திருத்துவது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின்றி நாட்டை நிர்வாகிக்க முடியாது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பெரும்பான்மை இல்லாத திருட்டு அரசாங்கம்.

திருட்டுத்தனமாக நியமிக்கப்பட்ட பிரதமர். சட்டவிரோதமான அமைச்சரவை. சட்டரீதியான அரசாங்கத்தை கொண்டு நடத்த வேண்டுமாயின் பெரும்பான்மை பலம் உள்ள அணியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. சிலர் அப்படி கூறுகின்றனர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு 113 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றது. தேவையெனில் சத்திய கடிதங்களையும் வழங்க நாங்கள் தயார்.

வசந்த சேனாநாயக்க எமக்குள்ள 113 பெரும்பான்மை உறுப்பினர்களில் உள்ளடக்கப்படவில்லை. நாங்கள் கூறும் 122 உறுப்பினர்கள் இடையிலும் அவர் இல்லை.

நாடாளுமன்ற விவகார தெரிவுக்குழுவிற்கு நாங்கள் 7 உறுப்பினர்களை பரிந்துரைத்தோம். மற்றைய அணியினருக்கு 5 பேருக்கு வாய்ப்பு இருந்தது.

அதனை அவர்கள் ஏற்கவில்லை என்பதால், சபாநாயகர், வாக்கெடுப்பு நடத்தும் யோசனையை முன்வைத்தார். அதற்கு அமைவாக இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது எனவும் ஹர்சன ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி