என்னதான் நடக்குது உலகத்தில: 91 வயது பாட்டியை காதலிக்கும் 31 வயது இளைஞன்

அமெரிக்காவை சேர்ந்த 91 வயது பாட்டியை கனடாவை சேர்ந்த 31 வயது இளைஞன் காதலித்து வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் இதுபோன்று வினோதமாக இருக்கும் காதலர்களை படம்பிடித்து காட்டுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடியாக கைல் ஜோன்ஸ் (31) மார்ஜோரி மெக்குல் (91) என்பவர்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே 60 வயது வித்யாசம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட காதலை பற்றி அனைவரும் வியப்பாக பார்த்து வருகின்றனர்.

இதுபற்றி ஜோன்ஸ் பேசுகையில்,

எனக்கு இது முதல்முறை அல்ல. நான் ஏற்கனவே 70, 80 மற்றும் 90 வயதுள்ள பெண்களுடன் டேட்டிங் சென்று உறவு கொண்டுள்ளேன்.

ஒரு சில ஆண்களுக்கு வயதான பெண்களை தான் பிடிக்கும். அதை போல தான் எனக்கும், வயதானவர்களை பிடித்ததால் அவர்களுடன் டேட்டிங் செய்கிறேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து மார்ஜோரி கூறுகையில்,

நான் ஆரம்பத்தில் அவனை என்னுடைய ஒரு மகன் போல தான் நினைத்தேன். பிறகு பழக ஆரம்பித்ததும் அவனை பிடித்துவிட்டது என்று கூறியுள்ளார்.
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி