சஜித்திற்கு பிரதமராகும் தகுதி கிடையவே கிடையாது!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கு பிரதமராவதற்கான தகுதி கிடையவே கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.

சஜித் பிரதமர் அல்ல கிராமிய நல்னபுரி உறுப்பினராவதற்கு கூட தகுதி கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

“ஜனநாயகம் பற்றி தற்போது பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் ஊடாகவே கடந்த காலங்களில் பாரிய மோசடிகள் இடம் பெற்றுள்ளன.

வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காகவே கடந்த பத்து மாதங்களில் 3000 இலட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மக்களின் வரிப்பணத்தினை தனது அமைச்சின் பணிகளின் விளம்பரத்திற்காக பயன்படுத்தும் எவ்வித அதிகாரங்களும் சஜித் பிரேமதாசவிற்குகிடையாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி