யுத்தத்தின் வடு! கால்களை இழந்த இரு சிறுவர்களின் மனதை உருக்கும் கோரிக்கை!

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த இரண்டு சிறுவர்கள் பல்வேறு தேவைப்பாடுகளுடன் காணப்படுவதுடன், அவர்களுக்கான வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறுதி யுத்தத்தின்போது இடம் பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் தங்கியிருந்த சமயம் எறிகணை வீச்சில் தமது கால்களை இழந்த குறித்த சிறுவர்கள் தற்போது வட்டக்கச்சி இராமநாதபும் பகுதியில் தமது பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களுக்கு அதிக தேவைப்பாடுகள் உள்ள நிலையில் அவற்றை தீர்த்துக் கொள்ளக் கூடிய பொருளாதார வசதிகள் இல்லை. அன்றாடம் கூலி வேலைகளை நம்பி வாழும் குடும்பங்களாகவே காணப்படுகின்றன.

குறைந்தது இவ்விரண்டு சிறுவர்களினதும் பாடசாலைக்கான போக்குவரத்து வசதிகளையாவது ஏற்படுத்தி தருமாறு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி