பஸ் சாரதியின் கவனக்குறைவால் மயிரிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்

வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று மாலை 4.30 மணியளவில் இ.போ.ச பஸ் சாரதியின் அசமந்தமான செயற்பாட்டால் விபத்தொன்று ஏற்பட்டள்ளது. எனினும் இரு இளைஞர்கள் அதிகஸ்டவசமாக உயிர்தப்பியுள்ள நிலையில் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இச்சம்பவம் தொடுர்பாக தெரியவருவதாவது,

வவுனியா ஏ9 வீதியில் இரு இளைஞர்கள் மோட்டசார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது வேகமாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வீதியால் வந்த இளைஞர்களை கவனத்தில் கொள்ளாது பஸ் நிலையத்திற்குள் நுழைவதற்காக பஸ்ஸை திருப்பியுள்ளனர்.இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் பஸ்ஸின் பின் பகுதியில் மோதுண்டு கீழே வீழ்ந்து காயமடைந்துள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் பெரும் சேதத்திற்கு உள்ளானது.

இந் நிலையில் கீழே விழுந்த இரு இளைஞர்களும் தாம் உயிர் தப்பிய அதிர்ச்சியில் இரந்து மீள்வதற்குள் இ.போ.ச சரதியும் நடத்துனரும் இளைஞர்கள் மீது குற்றம்சாட்டியவாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

எனினும் குறித்த பகுதியில் நடந்து சென்ற வயோதிபர் குறித்த சம்பவத்தினை நேரடியாக தான் கண்டதாகவும் பஸ் செலுத்தப்பட்ட விதமே பிழையானது என பொலிஸாருக்கு தெரிவித்தார்.

எனினும் இ.போ.ச சாரதியும் நடத்துனரும் குறித்த வயோதிபரை அப்பகுதியில் இருந்து அகன்று செல்லுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதுடன் பொலிஸார் மூலமாக குறித்த கண்ட சாட்சியை கலைக்க முயன்றனர்.எனினும் பொலிஸார் குறித்த பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பஸ்ஸையும் சேதத்திற்குள்ளான மோட்டார் சைக்கிளினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்

Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி