பிரித்தானிய இளம்பெண்ணை கொன்றவன் நீதிமன்றத்தில் ஆஜர்: கொந்தளித்த குடும்பத்தினர்

பிரித்தானியாவிலிருந்து நியூஸிலாந்துக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்பெண் திடீரென மாயமான நிலையில் அவரது உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியப் பெண்ணான Grace Millane (22) நியூஸிலாந்துக்கு சுற்றுலா சென்ற நிலையில் திடீரென மாயமானார்.

ஒரு வாரத்திற்குப்பின் அவரது உடல் Aucklandக்கு வெளியே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மிக நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பிறகு Jesse Kempson (26) என்னும் இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

Millane தங்கியிருந்த அதே தெருவில் வசித்தவன் இந்த Kempson என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.இருவரும் முகநூலில் ஒருவரோடு ஒருவர் உரையாடியதும், பின்னர் Aucklandஇல் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரு இளைஞனுடன் Millane காணப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று Aucklandஇல் உள்ள நீதிமன்றம் ஒன்றில் Kempson ஆஜர் படுத்தப்பட்டான்.

அவனைக் கொண்டு வரும் போது, கோபமடைந்த, நீதிமன்றத்தில் கூடியிருந்த Millaneஇன் நண்பர்களும் உறவினர்களும், Kempsonஐப் பார்த்து அருவருப்பானவனே என கூச்சலிட்டனர்.ஒன்றரை மணி நேர விசாரணைக்குப்பின் பொலிசார் அவனை காவலில் அடைப்பதற்காக கொண்டு சென்றனர்.

இதற்கிடையில் நியூஸிலாந்து பிரதமரான Jacinda Ardern, Millaneஇன் குடும்பத்தாரிடம் நியூஸிலாந்து சார்பில் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி