எமனாகிய சேலை! பரிதாபமாக பலியான பெண்

மோட்டார் சைக்கிளில் பயணஞ்செய்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சேலையின் பகுதியானது, குறித்த மோட்டார் சைக்கிளின் சில்லில் சிக்கி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளார்.

மொரவக்க – நெளும் வீதியில் களுபோவிட்டியன பிரதேசத்துக்கு அருகில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் குறித்த பெண்னை கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டமையை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணஞ்செய்யும் பொழுது, அப்பெண் அணிந்திருந்த சேலையின் பகுதியானது, மோட்டார் வாகனத்தின் பின் பக்க சில்லில் சிக்கிகொண்டமையால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி