பூதன் வயல் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த சில நாட்களாக குடிமனைக்குள் புகும் காட்டு யானைகள் தென்னம்பிள்ளையினை வீழ்த்தி குருத்தினை திண்டு அழித்து வருகின்றது.

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

கடந்த சில நாட்களாக மக்கள் வாழ் இடங்களுக்குள் புகுந்துகொள்ளும் காட்டு யானை ஒன்று தென்னந்தோட்டங்களுக்குள் புகுந்து வளர்ந்துவரும் காய்க்கும் தென்னங்கன்றுகளை அழித்துள்ளது.

49 தென்னங்கன்றுகள் அழித்துள்ளதாக காணி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலீசாரிடம் சென்று முறையிட்டும் அவர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் முறையிட சொல்லியுள்ளார்கள்.

அவர்களிடம் முறையிட்டு அவர்கள் பத்து வெடிகளை கொடுத்துள்ளார்கள் யானை வந்தால் கொழுத்திபோடுமாறு.

மதவளசிங்கன் காட்டுப்பகுதியில் நிலைகொண்டுள்ள யானை ஒன்று கடந்த நாட்களாக பூதன் வயல் கிராமத்தில் உள்ள தென்னங்கன்றுகளை அழித்து வருகின்றது கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் ஒருவரின் 25 தென்னங்கன்றுகள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவர்களின் அழிவு தொடர்பில் கிராம சேவகர் ஊடாக பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கடந்த ஆண்டும் மார்கழி மாதம் இவ்வாறு காட்டுயானையின் தொல்லையினால் அறுபதிற்கு மேற்பட்ட தென்னம்பிள்ளைகள் அழித்துள்ளன.

காட்டு யானையின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள யானை வேலி அமைத்து தரவேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி