ஈவு இரக்கமின்றி மனிதர்களை சுட்டுக் கொன்ற ரஷ்ய அழகி: காரணம் இதுதானாம்

உக்ரைனைச் சேர்ந்த Olga Shishkina (21) ஒரு ஆதரவற்ற இளம்பெண். ரஷ்ய அதிபர் புடினின் ராணுவத்தில் தன்னார்வலராக இணைந்த Olga முதலில் ஒரு உளவாளி என சந்தேகிக்கப்பட்டார்.

பின்னர் தன்னை நிரூபித்த Olga, ராணுவத்துக்காக கொல்லும் மோசமான கொலைகாரியானார். அதாவது ஸ்னைப்பர் என்று அழைக்கப்படும், வெகு தொலைவிலிருந்து குறி பார்த்து சுடும் ஒரு வீராங்கனையானார் Olga.

சுமார் 4000 அடி தொலைவிலிருந்தும் மிக துல்லியமாக குறிபார்த்து சுடும் திறன் உடையவர் Olga.பின்னர் ராணுவத்திருந்து ஓய்வு பெற்றதும் அவர் அழகிப்போட்டி ஒன்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

அவரிடம், இத்தனை பேரைக் கொன்றிருக்கிறீர்களே, உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா என்று கேட்டால், அப்படிக் கேட்பதே தவறு, ஸ்னைப்பர்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மனிதர்களைக் கொல்வதில்லை, நாங்கள் இலக்குகளைத்தான் சுடுகிறோம் என்கிறார்.

அவர்கள் மனிதர்கள் என்றோ, அவர்களுக்கு குடும்பம், குழந்தை எல்லாம் இருக்கிறார்கள் என்றோ நான் எண்ணுவதில்லை என்கிறார் அந்த ’அழகி’.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி