முடிவிலியாய் தொடரும் மன்னார் மனித புதைகுழி! இதுவரையில் மீட்கப்பட்ட மொத்த எலும்புக்கூடுகள்

மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை குறித்த மனித புதை குழியில் 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 111ஆவது நாளாக இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 250 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
குறித்த அகழ்வு பணியை ஆரம்பித்து வைத்த அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ அவசர கடமையின் நிமித்தம் அகழ்வு பணி இடம்பெறும் இடத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றதன் காரணத்தினால் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் அவரிடம் கருத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி