குழந்தையை தூங்க வைத்துவிட்டு சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வவுனியா – நெடுங்கேணி – ஊஞ்சல்கட்டி பகுதியில் 8 மாத குழந்தை ஒன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தீவிர தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று மாலை குறித்த குழந்தையை உறங்கவைத்துவிட்டு, வீட்டிலிருந்து வெளியே சென்ற தாய், மீண்டும் வீடு திரும்பியபோது குழந்தையை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அருகில் இருந்த கிணறு ஒன்றில் குறித்த குழந்தை சடலமாக அடையாளம் காணப்பட்ட நிலையில், மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் இருந்த மற்றுமொரு உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரே குழந்தையை கிணற்றுக்கள் எறிந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி