செவ்வாய் கிரகத்தில் கொட்டிக்கிடக்கிறதா தங்கம்?

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ள ரோவர்ஸ் ஆய்வு இயந்திரம், தங்க நிறத்திலான கற்களினை செவ்வாய் கிரகத்தில் கண்டறிந்துள்ளது.

இதுபற்றி கூறியுள்ள நாசா ஆராய்ச்சியளர்கள், தங்க நிறத்திலான அந்த மர்ம பொருள் எங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அது என்னவென்பது இதுவரை அறியப்படாத நிலையில், எங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த கற்களுக்கு “லிட்டில் கொல்சன்” என பெயரிட்டுள்ளோம். அந்த மர்மமான பொருளை பற்றிய புதிரை தீர்க்க வேண்டுமெனில், அதன் ரசாயன கலவை ஆய்வு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த ரோவர்ஸ் இயந்திரத்தில், லேசர் உணர்திறன் கொண்ட காமிரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம் வேதியியல் தூண்டலை நிகழ்த்தி மர்ம பொருளை பற்றிய ரகசியத்தை கண்டறிய உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி