கோணேசபுரி பகுதியில் வீடொன்றினை தீயிட்டு எரித்த நபருக்கு விளக்கமறியல்!

திருகோணமலை கோணேசபுரி பகுதியில் வீடொன்றினை தீயிட்டு எரித்த சந்தேக நபரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.

கோணேசபுரி, இலங்கை செஞ்சிலுவை சங்க வீடமைப்புத் திட்டம் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கோணேசபுரி பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளருடன் ஏற்பட்ட குரோதம் காரணமாக வீட்டினை தீயிட்டு எரித்ததாக பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி