மனிதகுலம் முற்றாக அழியும் அபாயம்! வெளியாகிய அதிர்ச்சி எச்சரிக்கை

மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய காலநிலை மாற்ற மாநாடு போலந்தில் ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் உடனடி நடவடிக்கையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 200 நாடுகள் கலந்துகொண்டுள்ள இம்மாநாடு 2C (3.6F) க்கு கீழே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் கிட்டத்தட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் பசுமை இல்ல வாயு வெட்டுகளை கண்காணிப்பதற்கான ஒரு விதிமுறை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைத் தலைவர் மரியா எஸ்பினோசா,

தற்போதைய விகிதத்தில் காலநிலை மாற்றம் முன்னேறினால் மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாங்கள் அவசரமாகவும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும் எனவும் எதிர்கால தலைமுறையினருக்கு பொறுப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பரிஸில் ஒப்புக் கொள்ளப்பட்டதைவிட கார்பன் உமிழ்வுகள் மேலும் அதிகமாக குறைக்கப்படவேண்டுமென இந்த ஆண்டு பல விஞ்ஞான அறிக்கைகள் எச்சரித்துள்ள நிலையில் இம்மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பரிஸ் உடன்பாட்டிற்கு தங்கள் அர்ப்பணிப்பை G20 நாடுகள் கடந்தவார இறுதியில் உறுதிப்படுத்தியதையடுத்து இந்தவாரம் இடம்பெறும் காலநிலை மாற்ற உச்சிமாநாடு மேலதிக ஊக்கத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி