வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!-

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கிணற்றில் சடலமாக மிதந்துள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் புதிய கார்னர் தெருவை சேர்ந்தவர்கள் கர்ணன் – ஆதிலட்சுமி தம்பதியினருக்கு 33 வயதில் இந்திரா என்ற மகளும், பாலாஜி என்ற மகளும் உள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திரா, மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று பாலாஜி வெளியில் வேலைக்கு சென்றுவிட்டார். அவருடைய பெற்றோர் இருவரும், மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.

பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்புகையில், தனியாக இருந்த இந்திர காணாமல் போயுள்ளார்.

வீட்டில் எங்கும் தேடிய நிலையில் அப்பொழுது இந்திரா வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், இந்திராவின் சடலத்தை வெளியில் மீட்டெடுத்தனர்.

பாலாஜி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்திரா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி